வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே மேல்விஷாரம் தஞ்சாவூரான் காலணி உள்ளது. இந்த காலணி அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் தஞ்சாவூரான் காலணி குடியிருப்பு வாசிகள் உள்ளிட்டோர் காலை மற்றும் மாலை நேரத்தில் நடைப் பயிற்சி மேற்கொள்வது வழக்கம்.


இப்படி வாயை கொடுத்து சிக்கிக்கிட்ட கொலைகாரர்கள் - பதறவைத்த 7 ஆண்டு ரகசியம்!

இன்று வழக்கம்போல் அப்பகுதியினர் நடைப்பயிற்சியில் ஈட்டுப்பட்டிருந்தனர். இவர்கள் நடைப்பயிற்சி செல்லும் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சாலையை ஓட்டி கால்வாய் ஒன்று உள்ளது. நடைப்பயிற்சியில் ஈட்டுப்பட்டிருந்தவர்கள், இந்த கால்வாயில் சிறிய குழந்தையின் சடலம் மிதப்பதைக் கண்டனர்.

அதிர்ந்துபோன பொது மக்கள், இந்த விடயம் குறித்து ஆற்காடு நகரக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர், கால்வாயில் மிதந்த குழந்தையை மீட்டனர்.