எதிரிகள், துரோகிகளை ஆட்சியமைக்கவிட மாட்டோம்: டிடிவி தினகரன்

உள்ளாட்சி தேர்தல் குறித்து அமமுக மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம், திருச்சியில் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் இன்று (நவம்பர் 22) நடைபெற்று வருகிறது.


முன்னதாக, தினகரன் செய்தியாளர்களிடம் கூறியபோது, "உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? என்பது தெரியவில்லை. ஆனாலும், நாங்கள் போட்டியிட தயாராக இருக்கிறோம் என்பதற்கான கூட்டம்தான் இது.

உள்ளாட்சி தேர்தலுக்குள் பதிவு பெற்றுவிட்டால், கட்சியின் பெயரால் போட்டியிடுவோம். இல்லாவிட்டால், சுயேச்சையாக போட்டியிடுவோம். எங்களது இலக்கு சட்டமன்ற பொதுத் தேர்தல் தான்.

2021ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் அற்புதம் நிகழும். நல்ல மாற்றம். மக்கள் விரும்பும் மாற்றம் நடைபெறும். திமுகஅதிமுக இல்லாத ஆட்சி அமையும். எங்கள் எதிரிகள், துரோகிகளை (திமுக, அதிமுக) ஆட்சியமைக்க விட மாட்டோம்” என்று டிடிவி தினகரன் கூறினார்.