எக்காரணத்தை கொண்டும் "இதையெல்லாம்" கூகுளில் தேட வேண்டாம்; அப்புறம் நாங்க பொறுப்பில்ல!
யாராவது ஏதாவதொரு கேள்வி கேட்டு, அதற்கு பதில் தெரியாவிட்டால் நாம் என்ன செய்வோம்? உடனடியாக கூகுள் செய்வோம், அப்படித்தானே? இப்படியாக நமக்கு தெரியாத விஷயங்களின் பதில்களை அறிய உடனடியாக 'கூகுளிங்' செய்து பார்க்க நம்மில் பெரும்பாலோர் பழகிவிட்டோம். பச்சரிசி பாயசம் வைப்பது எப்படி என்பது தொடங்கி ஆயிரக்கணக்கான ரூபாய்களை ஆன்லைன் பேங்கிங் வழியாக பரிமாற்றம் செய்வது வரை அல்லது மருந்துகளை வாங்குவது வரை அனைத்தையும் 'கூகுள்' வழியாக செய்யவே நாம் முனைகிறோம். ஆனால் நம்மில் பெரும்பாலான மக்கள் ஒரு குறிப்பிட்ட விடயத்தை மறந்து விடுகிறார்கள். அதாவது, கூகுள் என்பதும் ஒரு ஆன்லைன் தளம்தான், கூகுள் ஒன்றும் அதன் சொந்த உள்ளடக்கத்தை கொண்டிருக்கவில்லை. அங்கே உங்களுக்கு தேவையான தகவல்களை வழங்கும் வலைத்தளங்கள் உள்ளது, அவ்வளவுதான்! அதாவது"ஆன்லைன் ஆபத்துகள்" என்கிற பட்டியலின் கீழ் உள்ள அத்துணை "ஆப்புகளும்" கூகுளிலும் உள்ளது என்று அர்த்தம். ஒருவேளை நீங்கள் இதுபோன்ற ஆப்புகளில் அல்லது ஆபத்துகளில் சிக்கி கொள்ளாமல் இருக்க விரும்பினால் எக்காரணத்தை கொண்டும் கூகுள் வழியாக இந்த 12 மேட்டர்களையும் தேட வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறீர்கள்! மீறி தேடினால், பிறகு நாங்கள் பொறுப்பில்லை!