பாஜகவுக்கு உத்தவ் தாக்கரே வைத்த 'ஐஸ்'

மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தேவேந்திர ஃபட்னவிஸ் குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.


மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில், இரண்டு நாள் சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இறுதி நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) இக்கூட்டத்தொடரில், முதல்வர் உத்தவ் தாக்கரே பேசியது:

தேவேந்திர ஃப்டனவிஸை, எதிர்க்கட்சித் தலைவர் என எல்லோரும் அழைக்கின்றனர். ஆனால், நான் அவரை அப்படி அழைக்கமாட்டேன். என்னைப் பொருத்தவரை அவர் எதிர்க்கட்சித் தலைவர் அல்ல; பொறுப்புமிக்க ஓர் தலைவர்.

அவரிடமிருந்து நான் நிறைய விஷயங்களை கற்று கொண்டுள்ளேன். நான் அவருக்கு எப்போதும் நண்பராகவே இருப்பேன். சிவசேனாவுடன் பாஜக இணக்கமாக இருந்திருந்தால், கசப்பான அனுபவங்கள் எதுவும் நிகழ்ந்திருக்காது என்று உத்தவ் தாக்கரே உருக்கமாக பேசினார்.