சுலைமானி உடலை புதைத்து சில மணி நேரத்தில் தாக்குதல்.. சொல்லிவிட்டு செய்த ஈரான்.. என்ன நடந்தது

அமெரிக்க விமான படை தளம் மீது ஈரான் ராக்கெட் தாக்குதல் டெஹ்ரான்: ஈரான் குவாட்ஸ் ராணுவ தளபதி சுலைமானியில் உடலை புதைத்து சில மணி நேரத்தில் அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் படைகள் ராக்கெட் தாக்குதல் நடத்தி உள்ளது. போர் வந்துவிட்டது..


அமெரிக்கா ஈரான் இடையே நடக்கும் சண்டை இதைதான் உணர்த்துகிறது. இரண்டு நாடுகளும் இன்னும் அதிகாரபூர்வமாக போர் என்று அறிவிக்கவில்லை. ஆனாலும் போருக்கு உண்டான அனைத்து விஷயங்களையும் இரண்டு நாடுகளும் செய்து வருகிறது

இன்று ஈராக்கில் இருக்கும் அமெரிக்காவின் 2 விமானப்படை தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் எவ்வளவு சேதம் ஏற்பட்டது, எத்தனை பேர் பலியானார்கள் என்று இன்னும் விவரம் வெளியாகவில்லை.

அமெரிக்க நேரப்படி அங்கு மாலை 5.30 மணிக்கு (அங்கு செவ்வாய் கிழமை) இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்தியா நேரப்படி காலை 4.30 மணிக்கு தாக்குதல் நடந்துள்ளது. ஈரான் நேரப்படி இன்று அதிகாலை 2 மணிக்கு தாக்குதல் நடந்துள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட ஈராக்கிலும் இதே நேரம்தான்.